×

முட்டை சேமியா

தேவையான பொருட்கள்

1 பாக்கெட் சேமியா
1/4 கப் எண்ணெய்
2 முட்டை
1 வெங்காயம்
1 தக்காளி
கொத்தமல்லி புதினா
இஞ்சி பூண்டு பேஸ்ட்
மிளகாய்த்தூள்
மல்லித்தூள்
கரம் மசாலா தூள்
உப்பு.

செய்முறை

முதலில் சேமியாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதன்பின், கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி விட்டு தக்காளியை சேர்த்து மசியும் வரை வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதி வந்ததும் வறுத்து வைத்த சேமியாவை சேர்த்து கிளறவும். தீயை குறைத்துக் கொண்டு முட்டையை உடைத்து மேலாக ஊற்றவும். மேலும் மூடி போட்டு 5 லிருந்து 10 நிமிடங்கள் விடவும். கொத்தமல்லி, புதினா இலைகளை நறுக்கி சேர்த்துக் கிளறவும். இப்போது சுவையான முட்டை சேமியா தயார்.

The post முட்டை சேமியா appeared first on Dinakaran.

Tags :
× RELATED சைனீஸ் காளான் சூப்